Tamilnadu
10 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த தினசரி கொரோனா தொற்று... அரசின் தொடர் முயற்சியால் நல்ல முன்னேற்றம்!
தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் விளைவாக கடந்த 1 மாதமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 210 பேர் உயிரிழந்துள்ளனர். 22,720 பேர் குணமடைந்துள்ளனர். அரசின் தொடர் முயற்சிகளால் தமிழ்நாட்டில் கடந்த 27 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,75,010 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 9,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 22,720 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது.
210 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 109 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 101 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30,548 ஆக உள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!