Tamilnadu

மதுரையில் கலைஞர் நூலகம், கி.ராவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு !

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு தலைமையில் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் பின்வருமாரு :-

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை, கி.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைப்பதற்கான மதீப்பீடுகள் வரைபடங்களை விரைந்து வழங்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை இந்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்த தரவுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கொரோனா காலத்தில் 12,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்த பொறியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் தி.மலையில் குறைந்து வரும் கொரோனா தொற்று” : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!