Tamilnadu
“தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சியால் தி.மலையில் குறைந்து வரும் கொரோனா தொற்று” : அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்து மற்றும் உணவு, அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார். பின்னர் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நம்மை தொற்றில் இருந்து பாதுகாக்கும்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்து உள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பேரையும் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தி.மலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட 1,750 டோஸ் தடுப்பூசியும் செலுத் தப்பட்டுவிட்டது.
தடுப்பூசி முகாமில், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஓரிரு நாட்களில் தடுப்பூசி வந்ததும் மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்கோயில் பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவி மற்றும் அடி அண்ணாமலை ஊராட்சியில் மரக்கன்று நடும் திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!