Tamilnadu

திருப்பூரில் 27 பேருக்கு கொரோனா பரவ காரணமாக இருந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் மில்லுக்கு சீல்!

திருப்பூர் மாவட்டம் காங்கயம் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ நடராஜனுக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மில் நெய்க்காரன்பாளையத்தில் உள்ளது. அங்கு 280 பேர் வேலை செய்கின்றனர். இந்த மில் ஊரடங்கை மீறி செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் அந்த மில்லில் பணியாற்றும் 15 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து ஊரடங்கை மீறி ரகசியமாக இயங்கிய்தால் 27 தொழிலாளருக்கு கொரோனா பரவக் காரணமாக இருந்த மில்லை பூட்டி 'சீல்' வைத்தனர்.

பேரிடர் காலத்தில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவின் மில் செயல்பட்டு கொரோனா தொற்று பரவக் காரணமாக அமைந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல் புகார்”: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!