Tamilnadu
20 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறப்பு : தூத்துக்குடி விவசாயிகளுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சிய தமிழக அரசு!
நெல்லை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு கார் சாகுபடிக்காக கடந்த 1ம் தேதி பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கு வந்து சேர்ந்தது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணையில் உள்ள கீழ கால்வாயில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில், தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கீழ கால்வாயில் விவசாய பணிகளுக்கு தண்ணீரை திறந்து விட்டார்.
இதைத்தொடர்ந்து கீழ் கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இந்த கால்வாய் மூலம் வரக்கூடிய தண்ணீரை கொண்டு சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாதே நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் அரசாக இருக்க கூடிய தி.மு.க அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில்தான் கார் சாகுபடிக்கு இந்த ஆண்டு பாபநாசம் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது மருதூர் அணை வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் எனவும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !