Tamilnadu
சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க! தமிழ் வளர்க’ பெயர் பலகை திறப்பு !
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாளான (ஜூன் 3) இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக "தமிழ் வாழ்க தமிழ் வளர்க" என்னும் பெயர் பலகையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்கள், தாயகம் கவி, ஐ.ட்ரீம்ஸ் மூர்த்தி, மாதாவரம் சுதர்சனம், பரந்தாமன், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
“ஆசிரியர் தினத்தில் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க உறுதிகொள்வோம்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
“கே.என்.நேரு மீதான DVAC சோதனை.. பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு.. - முரசொலி விமர்சனம்!
-
கைது செய்வதுதான் ஒரு ஜனநாயக அரசின் பணியா? : த.வெ.க அரசுக்கு DMK IT Wing சரமாரி கேள்வி!
-
“விவசாயிகளை அராஜகமாக கைது செய்துள்ள த.வெ.க அரசு” : கனிமொழி எம்.பி ஆவேசம்!