Tamilnadu
“குழந்தை திருமணங்களில் பங்கேற்பவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்” : அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், குழந்தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத்தகைய குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.
இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குனர் கவிதா ராமு மற்றும் துறையின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!