Tamilnadu

8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி:தமிழக அரசு ஆணை!

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்த முழு ஊரடங்கில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் இந்த தடை தொடரும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒருமாதத்திற்குள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read: “கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : தமிழக அரசு அறிவிப்பு!