Tamilnadu

இன்று கோவையில் மட்டும் 4,277 பேருக்கு கொரோனா தொற்று.. தமிழகத்தில் 3 லட்சத்தைக் கடந்த நோயாளிகள் எண்ணிக்கை!

தமிழக சுகாதாரத்துறையின் மாநில கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 34,867 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,59,185 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,59,13,847 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,83,757 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 4,277 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,899 பேருக்கும், திருப்பூரில் 1,808 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 27,026 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15,54,759 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 3,01,580 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 404 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 177 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 227 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 20,872 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “ஒரு வாரத்திற்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும்” - ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!