Tamilnadu
“கொரோனாவை தடுக்க தொலைநோக்கு திட்டத்தோடு தீவிரமாகச் செயல்படுகிறது தமிழக அரசு” : அன்பில் மகேஸ் பொய்யாமொழி
“தி.மு.க அரசு மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபடத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் கொரோனா சிகிக்சைக்கு தனி வார்டு தொடங்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளதா என்பது பற்றி அங்கிருந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. ஆட்சிப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் பல்வேறு விதமான கொரோனா நடவடிக்கைகளை முதல்வர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட வேண்டும் என்பதுடன் அவசியமின்றி வெளியில் சுற்றித்திரியாமல் இருந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்திட முடியம்.
இந்த ஆட்சி எப்போதும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதே போல் நமது மாநிலத்திலேயே இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைளுக்கான மருந்து உற்பத்தி உள்ளிட்ட தொலைநோக்கு திட்டத்தில் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மத்திய அரசிடமும் உதவி கேட்டுள்ளோம். இருப்பினும் நம் மாநிலத்திலேயே என்வெல்லாம் செய்ய முடியுமோ அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு என்பது அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மாணவ, மாணவிகள் கற்றலில் இருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது என்ற நல்லலெண்ணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. அவர்களாக முன்வந்து இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சுகாதாரத்துறையிடம் கேட்டறிந்த பின் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“தகுதியான மகளிருக்கு டிச.15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
“இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்!” : இலங்கை பிரதமரின் இந்திய வருகையையொட்டி முதல்வர் கடிதம்!
-
“WhatsApp வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் பழனிசாமி” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
"கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கூட ஆளுநருக்கு கிடையாது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தீர்மானம் !
-
ராணுவ அதிகாரி மீதான விமர்சனம்... பாஜக அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம் !