Tamilnadu
“உங்களது விடா முயற்சியும், சலியாத உழைப்பும் மக்களை மீட்கும்” : அ.அன்புச்செல்வன் புகழாரம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பேராசிரியர் அவர்களின் புதல்வர் அ.அன்புச்செல்வன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உங்களின் விடா முயற்சியும், சலியாத உழைப்பும் இந்த கடினமான பெருந் தொற்றில் இருந்து மக்களை மீட்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பேராசிரியர் புதல்வர் அ.அன்புச்செல்வன் எழுதியுள்ள கடிதம் வருமாறு :-
அன்புச் சகோதரர் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வணக்கம், தாங்கள் நேற்றிரவு 11 மணி அளவில் டி.எம்.எஸ். அலுவலகத்தில் இயங்கி வரும் Corono control room சென்று மக்களின் துயர்களை தொலை பேசியில் கேட்டறிந்து அதற்கு தகுந்த பதில்கள் அளித்தது மட்டுமல்லாமல் உடனடியாக சிலருக்கு உதவிகள் புரிந்தது அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது. மக்கள் உங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை கூடியிருக்கிறது.
All problems are opportunities என்று ஒரு ஆங்கிலச் சொற்றொடர் உண்டு, அந்த வகையில் இந்த பெருந்தொற்று சவாலை உங்களுக்கு கிடைத்த ஓர் opportunityயாக கருதி, அயராது உழைப்பை நல்கி உங்களது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தி வருவது அனைவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் மூலமாக சரியான மாற்றத்தைத் தான் கொண்டு வந்துள்ளோம் என்று மக்கள் நினைக்கின்றனர். உங்களைப் போன்று செயல்படும் ஓர் முதல்வர் கிடைத்ததைக் கண்டு தமிழகத்தில் வாழும் கோடானு கோடி தமிழர்களும் நிச்சயம் பெருமையடைவார்கள்.
இளைஞர்கள் முதல், சிறு குறு தொழில் முனைவோர், பெருந் தொழிலதிபர்கள் என்ற அனைத்து தரப்பினரும் உங்களின் செயல்பாடுகளில் திருப்தி கொண்டு உங்களோடு செயல்பட ஆர்வமாக உள்ளனர். உங்களது விடா முயற்சி மற்றும் சலியாத உழைப்பு இந்த கடினமான பெருந்தொற்றில் இருந்து மக்களை மீட்கும். வாழ்க தங்கள் நற்றமிழர் தொண்டு, வளர்க உங்கள் புகழ், வெல்க நம் அரசு” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !