Tamilnadu
இன்ஸ்டாகிராம் மூலம் உதவி கேட்பவர்களின் உயிரைக் காப்பாற்றும் மாணவிகள் - குவியும் பாராட்டு!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஹரித்தா மனோகர் மற்றும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பாரதி சிவக்குமார் உள்ளிட்டோர் இன்ஸ்டாகிராம் மூலம் பேரிடர் காலத்தில் அவசர உதவிகளைச் செய்து வருகின்றனர். சீனாவில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பு படித்து வரும் பாரதி, தற்பொழுது ஊரடங்கினால் ஆன்லைன் வகுப்புகளை வீட்டிலிருந்தே பயின்று வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏராளமான மக்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதை அறிந்த பாரதி, தன் நண்பர்கள் 10 பேருடன் ஒன்றிணைந்து இன்ஸ்டாகிராம் மூலம் உதவிகளைச் செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பாரதி சிவகுமார், உதவி கேட்பவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். குறிப்பாக தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் சிலிண்டர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து சேவையாற்றி வருகிறார்.
சென்னை மட்டுமல்லாமல் திருச்சி, சேலம், விருதுநகர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி என அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் தகவல்களை கண்டறிந்து உதவிகளை செய்து வருகிறார்.
இதேபோன்று ஒவ்வொரு பகுதிகளிலும் சமூக நல அமைப்பினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தால் வெகுவிரைவில் நோய்த்தொற்றை குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கடந்த 10 நாட்களில் 150 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்து இருப்பதாகவும், சென்னை மட்டுமல்லாமல் சேலம், கன்னியாகுமரி, திருச்சி போன்ற இடங்களில் இருந்து இரவு நேரங்களில் வரும் அழைப்புகளையும் தட்டாமல் அவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
தன்னார்வலர்கள் மருத்துவ மாணவர்கள் இதுபோன்று அரசுடன் இணைந்து பணியாற்றினால் வெகுவாக நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் உயிரிழக்காமல் காப்பாற்ற முடியும் எனத் தெரிவிக்கிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஒன்றிணைந்து உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக தேவைகளை அறிந்து உதவிகள் செய்வது மன நிம்மதி அளிப்பதாக பாரதி மற்றும் ஹரித்தா மனோகர் கூறுகின்றனர்.
தகவல் பரிமாறிக் கொள்ளும் இன்ஸ்டாகிராம் மூலம் மக்கள் உயிரை காப்பாற்ற முடியும் என நிரூபித்த மருத்துவ மாணவியின் நம்பிக்கை பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
Also Read
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!