Tamilnadu
“சிறப்பு பேருந்துகள்.. தனிமனித இடைவெளியுடன் பயணம்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பாராட்டு!
கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆம் தேதி முதல் 24 வரை தமிழகம் முழுவதும் முழு ஊரங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதனையடுத்து ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் செல்லும் சென்னைவாசிகளின் பயண வசதியாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்களுக்கு 24 மணி நேரமும் வெளியூர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துவசதிகளை செய்துள்ளது,
அதன்படி சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களில் வெளியூர் பேருந்துகள் அதியபடியாக இயக்கப்பட்டது. இதனால் தம்பரம் வழியாக திருச்சி, மதுரை, தென்காசி, புதுக்கோட்டை, கோவை, போன்ற தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சகம் செய்துகொடுத்ததால் வெளியூர் செல்லும் பயணிகள் எந்தவித இடையூரும் இல்லாமல், பேருந்துகளில் பயணம் செய்தனர்,
பெரும்பாலான பேருந்துகள் பயணிகள் இல்லாமல் ஒருசில பயணிகளுடன் வெளியூர்களுக்கு செல்வதை காணமுடிந்தது, இது போன்ற அவசியமான நேரங்களில் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பேருந்து கிடைக்காமல் அவதிபடும் நிலையே இருந்துவந்தது.
ஆனால் தற்போது தி.மு.கவின் தமிழக அரசு எடுத்த தூரித நடவடிக்கையால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் நெரிசல் இல்லாமல் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றித் தெரிவித்தனர். மேலும், ஊரடங்கு முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல தி.மு.க அரசு சிறப்பான பேருந்து வசதி செய்துகொடுத்துள்ளதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாக இருப்பதாக பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!