Tamilnadu

நேற்று பேட்டி; இன்று திட்டம் தொடக்கம் - சென்னையில் சித்தா கோவிட் மையம் திறந்து வைத்தார் மா.சுப்பிரமணியன்

சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் சித்தா கோவிட் சிகிச்சை மையத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி முறையில் அதிக அளவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறினார்.

அதன் அடிப்படையில் டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியில் 240 படுக்கை வசதிகள் கொண்ட சித்தா சிகிச்சை மையம் தொடங்கபட்டு,195 லேசான அறிகுறிகள் உடைய கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவற்றை சார்ந்த 1,410 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இத்துறைகள் சார்ந்த முன்கள பணியாளர்கள் வைத்து சித்தா கோவிட் சிகிச்சை மையங்களை அதிக அளவில் தொடங்க உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 12 சித்தா கோவிட் சிகிச்சை மையங்கள் திறக்க உள்ளதாகவும் மேலும் ஒரு வார காலத்திற்குள் 12 சித்தா கோவிட் சிகிச்சை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதன்படி சென்னையை தவிர்த்து மதுரை, திண்டுக்கல், ராணிப்பேட்டை நாகப்பட்டினம் புதுக்கோட்டை உள்ளிட்ட மற்ற 12 மாவட்டங்களில் இதுபோன்ற சித்தா கோவிட் சிகிச்சை மையங்கள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு வார காலத்திற்குள் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சித்தா மையம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை முழுவதும் 11,800 களப்பணியாளர்கள் உள்ளதாகவும், 15 மண்டலங்களில் 75 அலுவலர்கள் களபணியாளர்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் 21 கொரோனா ஸ்கிரீனிங் மையங்கள் உள்ளது. ஒரு வார காலத்திற்குள் கூடுதலாக 10 ஸ்கிரீனிங் மையங்கள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சுமார் 800 மருத்துவமணைகளில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Also Read: அலட்சியத்தால் மக்களின் உயிரை பணயம் வைத்த பா.ஜ.க.. கும்பமேளாவால் ஒரே மாதத்தில் 1.3 லட்சம் பேருக்கு கொரோனா!