Tamilnadu

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்க முயற்சி: சென்னையில் மருத்துவர் உட்பட 2 பேர் கைது!

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்சிடியூட் ஆய்வக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய நவீன தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டு கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படக்கூடிய ரெம்டீசிவர் மருந்து தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனைப் பயன்படுத்தி சிலர் கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக சிவில் சப்ளை சிஐடி பிரிவுக்கு தகவல் வந்தது , இதனையடுத்து கிங் மருத்துவமனை அருகே தீவிரமாக நோட்டமிட்டனர், அப்போது ரெம்டீசிவர் மருந்தினை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் எடுத்துவந்து கள்ளத்தனமாக ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்த மருத்துவமனை தற்காலிக மருத்துவர் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமசுந்தரம் மற்றும் சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலையை சேர்ந்தவர் மருந்தாளுனராக பணி புரியும் கார்த்திக் (28) ஆகிய இருவரையும் கைது செய்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்,

அப்போது விசாரணை செய்ததில் இவர்கள் இருவரும் ரெம்டெசிவர் மருந்தினை மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாமல் எடுத்துவந்து ரூபாய் 20000 க்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 24 மருந்து பாட்டில்களை கொண்ட 4 பெட்டிகளை கைப்பற்றினர், இவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.