Tamilnadu
தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் பலி... சென்னையில் 3வது நாளாக 4 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,97,672 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 13,625 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை 9,76,876 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,07,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 13,651 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 4,250 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 3,14,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,17,63,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,15,642 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!