Tamilnadu
வட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை : கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக எடுத்து வருகின்றனர். குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுட்ட நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதேவேளையில் கொரோனா நோயாளிக்கு பெரிம் தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் பெரும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 10 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியானது பெரும் சர்ச்சையானது. அதேபோல் பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.
வட மாநிலங்களில் இருந்த ஆக்சிஜன் பற்றக்குறை, தற்போது தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது.
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா நோயாளிக்கு வழங்கப்பட்டு வந்து ஆக்ஸிஜன் சிலிண்டரில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா நோயாளிகள் 6 பேரும் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை அங்கிருந்து அவசர அவசரமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். இதனையடுத்து மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
இந்நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மூன்று கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தற்போது வரை முறையான பதிலை அளிக்க மறுப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!