Tamilnadu
விவசாயிகளை நம்பவைத்து கழுத்தறுத்த எடப்பாடி பழனிசாமி... தேர்தல் முடிந்ததும் மும்முனை மின்சாரம் நிறுத்தம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு குறுவை சாகுபடி 3.65 லட்சம் மெட்ரிக் டன் நெல், இலக்கை விஞ்சி அதிக அளவில் மகசூல் ஆனது. ஆனால் உரிய நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டதால் மழையில் நனைந்து வீணானது. இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களிலேயே வாரக்கணக்கில் காத்திருந்து நெல்லை விற்பனை செய்தனர்.
அதேபோல் சம்பா சாகுபடியில் அறுவடை நேரத்தில் கடந்த ஜனவரி மாதம் பெய்த வரலாறு காணாத தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் பாதிக்கப்பட்டதால் மகசூல் பாதிக்கப்பட்டது. குறுவை, சம்பாவில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவாவது சரிகட்டலாம் என கருதிய விவசாயிகள் பம்பு செட் மூலம் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர்.
கோடை சாகுபடிக்கு தேவையான மும்முனை மின்சாரம் 12 மணி நேரமும் இருமுனை மின்சாரம் 12 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியாக 40 ஆயிரம் ஏக்கரில் நெல் தற்போது நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி முதல் தேர்தல் வாக்குப்பதிவு நாள் வரை மும்முனை மின்சாரம் கிடைத்து வந்த நிலையில், 6-ம் தேதிக்கு பிறகு தற்போது மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை. இருமுனை முன்சாரமும் குறைந்த அழுத்தத்தில் கிடைப்பதால் மோட்டார்கள் அவ்வப்போது பழுதாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மானாவரி பகுதி விவசாயிகள், தற்போது வெயிலின் தாக்கம் என்பது அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவையும் அதிகமாக உள்ளது. அரசு அறிவித்தபடி மும்முனை மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர். தேர்தலுக்காக விவசாயிகளை பழனிசாமி அரசு ஏமாற்றியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, தி.மு.க எம்.பி கனிமொழி “எட்டு நாளில் புரிந்து போன கெட்டிக்காரர்களின் பொய்யும் புரட்டும்” என விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!