Tamilnadu
டாஸ்மாக் கடையில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஆத்திரம் : கழுத்து நெறித்து கொலை செய்த கொடூரம்!
சென்னையை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வெளியே வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை வழி மறித்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தி எட்டி உதைத் தாக்குதல் நடத்தினார். இதில் கிழே விழுந்த அன்பழகனை, போதையின் இருந்த அந்த நபர் காலால் கழுத்தை மிதித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆணின் சடலம் ஒன்று சாலையில் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அன்பழகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அன்பழகனை காலால் மதித்து கொலை செய்த நபர் சென்னை அசோகா தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்று தெரிய வந்தது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மதுக்கடையில் ஆம்லேட்டை எடுத்தால், ஆத்திரத்தில் அன்பழகனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் சம்பவம் நடந்தபோது கிருஷ்ணமூர்த்தியுடன் இருந்த அப்பு என்பதை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !