Tamilnadu
"எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு?" : தோல்வி பயத்தில் குளறுபடியில் ஈடுபடும் அ.தி.மு.க-பா.ஜ.க!
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்ட மன்ற தொகுதிகளுக்கான பொது தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுங்கான்கடை அரசு துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நடந்த வாக்குப்பதிவில் வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அடுத்தடுத்து மூன்று முறை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது. நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறு காணப்பட்டதால், வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகவல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தடுத்து நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய விடாமல், செய்தியாளர்களை கைது செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை கொண்டு வந்து வாக்குப்பதிவை மீண்டும் தொடங்கினர். ஏற்கனவே பதிவான வாக்குகளின் நிலை என்ன என்று வாக்குச்சாவடி முகவர்களும், வாக்காளர்களும் கேள்வி எழுப்பிய நிலையில், முதலில் வாக்களித்தவர்களை அழைத்து வந்து மீண்டும் ஒட்டு போடுங்கள் என வாக்குச்சாவடி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!