Tamilnadu
“தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க - அ.தி.மு.க அரசு நடந்துக்கொள்கிறது” : எ.வ.வேலு குற்றச்சாட்டு!
தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு தனது சொந்த கிராமமான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்.
திருவண்ணாமலையில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். இந்த தேர்தலை எப்படி எல்லாம் சீர்குலைக்க வேண்டுமோ அந்த நோக்கில் பாரதிய ஜனதா கட்சி சீர்குலைக்கும் நோக்கில் நடந்துகொள்கிறது.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக , பா.ஜ.க கட்சியினர் நேற்று முதல் வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களை சந்தித்து மே 3ம் தேதி அந்த டோக்கனை கொடுத்து 4 கிராம் தங்கம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி ஒரு டோக்கன் வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!