Tamilnadu
“தமிழகத்தின் விடியலை தீர்மானிக்கும் தேர்தல்” : 234 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழகத்தில் 234 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், 3,998 பேர் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். சட்டமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 5 ஆயிரத்து372 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலிஸார், தமிழ்நாடு சிறப்பு படை போலிஸாரும் அடங்குவர். இதுதவிர முன்னாள் ராணுவத்தினர், ஊர் காவல் படையினர், தீயணைப்பு படையினர், சிறை வார்டன்கள், பாதுகாவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற போலிஸாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் 34 ஆயிரத்து 130 பேர் பணியில் உள்ளனர். மேலும், வெளி மாநிலங்களிலிருந்து 6 ஆயிரத்து 350 போலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதாக டி.ஜி.பி. திரிபாதி தெரிவித் திருக்கிறார்.
இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல்வாக்குச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னை உள்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்புநடவடிக்கைகளை கண்காணிக்கவும், முதியவர்களுக்கு உதவி செய்யவும் தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 விழுக்காடு வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், SIET கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதேப்போல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் உடன் வாக்களித்தார். அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர் என பல்வேறு தரப்பினரும் வாக்களித்து வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!