Tamilnadu

“அ.தி.மு.கவினரின் அந்த எட்டுப் பக்க விளம்பரம் பழைய புளித்துப்போன கதை” : எடப்பாடி அரசை சாடிய முத்தரசன் !

திமுகவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என முதலமைச்சர் அமைச்சர் மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும் என திருத்துறைப்பூண்டி மில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க தலைமையில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து நாளேடுகள் அனைத்திலும் எட்டுப் பக்க விளம்பரங்களை இன்றைக்கு வழங்கியிருக்கிறார்கள்.

அந்த எட்டுப் பக்க விளம்பரம் பழைய புளித்துப்போன கதை. யூகத்தின் அடிப்படையில் வந்த செய்திகளை எல்லாம் தொகுத்து இன்றைக்கு 8 பக்கம் ஒவ்வொரு பத்திரிக்கைளிலும் 8 பக்கம் விளம்பரங்களைக் கொடுத்து, தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை திசை திருப்பக் கூடிய ஒரு முயற்சியை அ.தி.மு.க தலைமை மேற்கொண்டிருக்கிறது.

முத்தரசன்

தமிழ்நாட்டின் அரசியல் அலை என்பது கடந்த பல நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து இப்பொழுது சூறாவளி காற்றாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு சாதகமாக வீசிக் கொண்டிருக்கிறது. இன்றோடு பிரச்சாரம் முடிகிறது. நாளை ஒருநாள் இருக்கிறது. இந்த வேகம் இன்னும் அதிகரிக்கும்.

இனி நம்மால் வெற்றிபெற முடியாது. உறுதியாக தோற்றுப் போவோம் 12 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையோடு அதை எப்படி விளம்பரங்களை கொடுத்த கோடிக்கணக்கில் விளம்பரங்களைக் கொடுத்து சரிகட்ட மேற்கொண்ட முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. இந்த விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.

கடைசியாக சொல்லிக்கொள்ள விரும்புவது, கடந்த சில நாட்களாக முதலமைச்சரே, ஊடகங்கள் மற்றும் உங்களுடைய முதலாளிகளை பத்திரிக்கை முதலாளிகளை நேரடியாக தொடர்புகொண்டு மிரட்டுகிறார். தி.மு.கவிற்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியிடக்கூடாது என முதலமைச்சர் அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்கள் ஊடகங்களை மிரட்டுவது என்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை ஆகும்.

ஜனநாயக தூண்களில் மிக முக்கியமானது என்பது பத்திரிகை தூண். அவர்களை மிரட்டி நொறுக்குவது ஒரு ஜனநாயக விரோத செயல்களை மிரட்டி பணிய வைக்க விரட்டுகிற இந்த காரியத்தை பா.ஜ.க, எடப்பாடி அரசு கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஊழல் செய்து சிறை சென்ற வரலாறுதான் அதிமுகவுக்கு; அதை மறந்திட முடியாது” - கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!