Tamilnadu
“ஏமாந்துடாதீங்க; பழனிசாமி, ராமதாஸ் முகத்தை உற்றுப் பார்த்தால் மோடி முகம் தெரியும்” - திருமாவளவன் பேச்சு!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன், திட்டக்குடி தி.மு.க வேட்பாளர் கணேசன் ஆகியோரை ஆதரித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் விருத்தாசலம் பாலகரை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்கு இருக்கும் அ.திமுக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க அல்ல. இது எடப்பாடி காலத்து அ.தி.மு.க. பா.ஜ.கவின் பினாமி கட்சியாக செயல்படுகிறது. நீங்கள் அ.தி.மு.கவிற்கு அளிக்கிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.வுக்கான ஓட்டுதான்.
அதேபோல, மாம்பழம் பாமகவின் சின்னம் இல்லை. அது பாரதிய ஜனதா கட்சியின் சின்னம். பாட்டாளி மக்கள் கட்சியின் அப்பாவி தொண்டர்களுக்கு நான் தெரிவித்துக் கொல்கிறேன் .நீங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால், நீங்கள் ஏமாறுகிறீர்கள். ஏனென்றால், பா.ம.க என்பது இப்போது பா.ஜ.கவாக மாறிக்கொண்டிருக்கிறது. மாம்பழத்தில் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்குத்தான் வலிமை தருமே தவிர, உங்களுக்கு வலிமை சேர்க்காது.
தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் சின்னம் தாமரை மட்டும் அல்ல. பா.ஜ.கவுக்கு 3 சின்னங்கள் இருக்கின்றன. ஒரு சின்னம் தாமரை, இன்னொன்று இரட்டை இலை, மூன்றாவது மாம்பழம். பா.ஜ.க இங்கு மூன்று முகங்களில் களம் காண்கிறது. அதேபோல் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க என மோடிக்கு மூன்று முகங்கள் இருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் முகத்தை உற்று நோக்கினால் அதில் மோடி தெரிவார். எடப்பாடி பழனிச்சாமி முகத்தை உற்று நோக்கினால் அதிலேயும் மோடி முகம் தெரியும்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுகிறேன் என்று நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அப்படி என்றால் என்ன பொருள் என்று சிந்தித்துப் பாருங்கள்.” எனப் பேசினார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!