Tamilnadu
“தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தவே மோடி, அமித்ஷா, யோகி உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர்”: டி.ராஜா குற்றச்சாட்டு!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவை ஆதரித்து வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா பேசுகளையில், “பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க படுதோல்வியை சந்திக்கும். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு அணி வெற்றி பெறும்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மட்டுமல்ல, அகில இந்திய அளவில் மக்கள் விரோத கொள்கைகளை பின்பற்றுகின்ற மோடி அரசிற்கு முடிவு கட்டுவதற்கான தொடக்கமாக இந்த தேர்தல் தீர்ப்பு அமையும். தமிழக மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணிக்கு ஒரு பேரலை உருவாகி சாதகமாக உள்ளது.
அப்படிப்பட்ட ஒரு கலவரத்தை தமிழகத்திலும் உருவாக்க வேண்டும் என்றுதான் பா.ஜ.க தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளார்கள். கோவையில் நடைபெற்ற சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவினர். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!