Tamilnadu
“போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திடீர் தற்கொலை” : காவலர்களின் தொடர் தற்கொலைக்கு என்ன காரணம்?
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி. மயிலாப்பூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிரேகா என்ற மனைவியும், தமிழ்செல்வன், பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பாலாஜி நேற்று முன்தினம் காலை பணிக்குச் சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். பிறகு இரவு உணவு முடித்துவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, நேற்று காலை நீண்ட நேரமாகியும் பாலாஜி அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி மற்றும் மகன்கள் கதவை தட்டியுள்ளனர்.
ஆனால் பாலாஜி கதவைத் திறக்காததால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பாலாஜி மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலாஜி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சைதாப்பேட்டை காவல் துறையினர், வேலைப்பளு காரணமாக பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!