Tamilnadu

பணம் கொடுத்த அ.தி.மு.கவினரை முற்றுகையிட்ட நரிக்குறவர் சமூகத்தினர்... வாக்கை விற்கமாட்டோம் என ஆவேசம்!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அ.தி.மு.க-வினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், “10 வருடமாக ஆட்சியிலிருந்து எதுவும் செய்யாமல், இப்ப ஓட்டு கேக்க வந்துட்டீங்களா?” என அ.தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்களே விரட்டியடிக்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் அ.தி.மு.க சாபில் எம்.ராஜநாயகம் போட்டியிடுகிறார். இதற்காக அ.தி.மு.கவினர் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பணம் கொடுக்க முயன்றனர்.

அப்போது, அங்கு வந்த நரிக்குறவர் சமூகத்தினர், “வாக்குக்காகப் பணம் வாங்கி நாங்கள் ஏமாற மாட்டோம், எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள், வீடு கட்டிக்கொடுப்போம், அடிப்படை வசதி செய்து கொடுப்போம் என சொன்னீர்கள், ஆனால் எதுவுமே செய்து கொடுக்கவில்லை, உங்களுக்கு நாங்கள் ஓட்டுப்போடமாட்டோம்” என ஆவேசமாகக் கூறி அ.தி.மு.கவினரை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: காலில் விழுந்து, துணி துவைத்து, கெஞ்சி ‘கொரளி’ வித்தை காட்டி ஓட்டு கேட்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்!