Tamilnadu
“இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா, உங்களுக்கு நல்ல சாவே வராது” : சாபம் விட்ட அ.தி.மு.க வேட்பாளர்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அ.தி.மு.க-வினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், “10 வருடமாக ஆட்சியில் இருந்து எதுவும் செய்யாமல், இப்ப ஓட்டு கேக்க வந்துட்டீங்களா?” என அ.தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்களே விரட்டியடிக்கின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர், “இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க” என்று சாபம் விட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோகனூரில் நடைபெற்ற அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.பி.பி.பாஸ்கர் உரையாற்றுகையில், "இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க. உங்களுக்காக இத்தனை திட்டங்களை அறிவிச்ச பின்னரும் ஓட்டு போடலைனா நன்றி மறந்தவங்களா ஆயிடுவீங்க. நாமக்கல் தொகுதி நன்றி கெட்ட தொகுதி என்ற பெயரை மக்கள் வாங்க வேண்டாம் '' என்று சாபம் விட்டுள்ளார். இவரது பேச்சு தொகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!