Tamilnadu
“மிஸ்டர் பழனி, நாங்க சொல்லிக்கொடுத்தத மட்டும் பேசுங்க” : CAA பற்றி பேசி மூக்குடைபட்ட அ.தி.மு.க!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க தங்களின் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிமுகங்களை முடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் பரப்புரை என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ‘தேர்தலின் கதநாயகன்' எனக் கூறி தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த அறிக்கையில், பெட்ரோல் விலை குறைப்பு முதல் நீட் ரத்து வரை தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற அழுத்தம் கொடுக்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.கவும் தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கொந்தளித்த நெட்டிசன்கள் பலரும், “நீங்கதானே ஆட்சியில் இருந்தீங்க, உங்க ஆதரவோடுதானே மத்திய பா.ஜ.க அரசு அந்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அப்போதே அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியது தானே? இப்ப தேர்தல் என்பதால் வெற்று வாக்குறுதிகளை கொடுக்கிறீங்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.கவின் தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி, “தி.மு.க தலைவர் உள்ளிட்ட வேறு எவரும் சி.ஏ.ஏவை எதிர்க்கலாம். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,"தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடும் என்று தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை மு.க.ஸ்டாலின் ஏன் எதிர்க்கிறார். தி.மு.க தலைவர் உள்ளிட்ட வேறு எவரும் சி.ஏ.ஏவை எதிர்க்கலாம். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படாது" என தெரிவித்துள்ளார்.
இவரது இந்த ட்விட்டர் பதிவு, “நாங்க சொல்லிக் கொடுத்தத மட்டும் பேசுங்க; உங்க இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது” என அ.தி.மு.க தலைமையை மிரட்டும் தொனியில் இருக்கிறது” என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!