Tamilnadu
முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் ரோக்கமாகவோ அல்லது ரூபாய் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பிலான பொருட்களை கொண்டு சென்றாலும் அதற்கு உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அந்த வாகனத்தில் தனியார் நகைக்கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக தங்க ஆபரணங்கள் மொத்தமாக எடுத்துச் செல்லப்படுவதாக தெரியவந்தது.
இந்த தங்க ஆபரணங்கள் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொது மையத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகனத்தில் இருந்த ரூபாய் 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 237.344 கிலோ தங்க ஆபரணங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாகன ஓட்டுனர் ஊழியர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுக்கப்பட்டு பின்னர் கெங்கவல்லி சார் கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தங்க ஆபரணங்கள் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு பொது மையத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் கொண்டு வரப்பட்ட தங்க ஆபரணங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் வாகனத்தில் இருந்த ரூபாய் 37 கோடியே 57 லட்சம் மதிப்பிலான 237.344 கிலோ தங்க ஆபரணங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வாகன ஓட்டுனர் ஊழியர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கணக்கெடுக்கப்பட்டு பின்னர் கெங்கவல்லி சார் கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!