Tamilnadu

“பல மாதங்களாக காத்திருந்தும் நிவாரணம் கிடைக்கவில்லை”- மனஉளைச்சலில் விவசாயி உயிரிழப்பு:சீர்காழியில் சோகம்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் நிவர், புரெவி மற்றும் பருவம் தவறிப் பெய்த மழையால் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதில் கொடகாரமுறை கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் 4 ஏக்கர் நெற்பயிரும் முற்றிலுமாக சேதமடைந்தது.

இதையடுத்து, சேதமடைந்த 4 ஏக்கர் நெற்பயிர்களுக்கும், அரசின் நிவாரண தொகை கிடைக்கும் என விவசாயி கிருஷ்ணமூர்த்தி, காத்திருந்தார். ஆனால் பயிர்ச்சேதத்திற்கு ஏற்ற, நிவாரணம் கிடைக்காமல், சிறு தொகை மட்டுமே கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்துள்ளது.

மேலும், வட்டிக்கு கடன் வாங்கி, கிருஷ்ணமூர்த்தி உழவு செய்திருந்தார். விவசாயத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தி தவித்து வந்துள்ளார். இதனால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அரசின் நிவாரணம் கிடைக்காத வகையில் அலட்சியமாகச் செயல்பட்டு, விவசாயி உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: கொரோனா ஊரடங்கால் 35 சதவீத இளைஞர்கள் வேலையிழப்பு : தோல்வியடைந்த பா.ஜ.க அரசு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!