Tamilnadu
‘நடிக்கறவங்களுக்கே மரியாதை.. நான் போறேன்’ : ராமதாஸுக்கு சொல்லிவிட்டு பா.ம.கவில் இருந்து விலகிய வைத்தி!
தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டி, வேட்பாளர்கள் பட்டியல் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.கவுக்கு 23 தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று (மார்ச் 10) போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் பா.ம.க வேட்பாளர்களையும் அறிவித்தது.
இதையடுத்து, ஜெயங்கொண்டம் தொகுதியில் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த வைத்தி, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு கொடுக்கப்படுகிறது என கூறி பா.ம.கவில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உழைப்புக்கு மதிப்பில்லை, நடிப்புக்கு மட்டுமே மதிப்பு. இன்று முதல் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்தும், வன்னியர் சங்க மாநில செயலாளர் பொறுப்பிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பா.ம.க கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!