Tamilnadu
"அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்வோம்" - மக்கள் அதிகாரம் வேண்டுகோள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியையும், பெரியார், திராவிட சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கும் கமல், சீமான் ஆகியோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில், "கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும், மதவாதத்தை அமல்படுத்திவரும் பா.ஜ.கவையும், இவர்களுடன் கைகோர்த்துள்ள அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணியை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அதே போல ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், பெரியார், திராவிட கருத்துகளைச் சிதைக்க முயற்சித்து, பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படும் கமல்ஹாசன், சீமான் போன்றோரையும் புறக்கணிக்க வேண்டும். பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில், அ.தி.மு.க மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ.கதான் தமிழகத்தை ஆட்சி செய்து, மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. தற்போது தமிழகத்தையும் அடிமையாக்கும் திட்டத்துடன் இவர்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எனவே தமிழக மக்கள் பா.ஜ.க-அ.தி.மு.கவின் கூட்டணி கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!