Tamilnadu
இப்படி ஒரு கூட்டணியை எங்காவது கண்டதுண்டா யுவர் ஹானர்? : தொகுதிக்காக அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க - பா.ஜக!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க-வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியது. இதனால் தொகுதிகளை இறுதி செய்வதில் அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த இழுபறிக்கு இடையே, அ.தி.மு.கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விதத்தில் பழனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.கவினர் தேர்தல் பரப்புரையைத் துவங்கி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.கவினரின் இந்த அடாவடி செயல் அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க கேட்பதை அறிந்த, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள், மாவட்ட அலுவலகம் முன்பு திரண்டு, பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியை கொடுக்கக் கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியைக் கொடுத்தால், கட்சியிலிருந்தும் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கூறி, நிர்வாகிகள் திரண்டதால் அ.தி.மு.க மாவட்ட தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றது.
அ.தி.மு.கவினரின் இந்த ஆர்ப்பாட்டம் பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு இடையே ஒரு சுமுகமான உறவு இல்லை என்பதையே காட்டுகிறது. இதுவே இவர்களின் தோல்விக்கு விதையாகிவிட்டதாக கோவை முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!