Tamilnadu
சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மறைக்கப் பார்க்கும் அதிமுக அரசு ?
ஓராண்டு காலமாக நாட்டு மக்களை முடக்கி வைத்திருந்த கொரோனா வைரஸின் பிடியிலிருந்து கொஞ்சம் சொஞ்சமாக தமிழகம் விலகி வருகிறது. இருந்தபோதும், கொரோனா தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் தென்பட்ட உருமாறிய கொரோனா தொற்றால் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்குமோ ? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதை உறுதி செய்யும் விதமாக, தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதியானது அதிக அளவில் கண்டறியப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (பிப்.,24) செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிறுத்திவிட்டதாகவும், இது தொடர்ந்தால் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் நேரிடும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். இது இன்னும் மக்களை அச்சமடைய செய்துள்ளது.
எனவே, எடப்பாடி பழனிசாமி அரசு, தேர்தலுக்காகப் பல கோடி ரூபாய் செலுவு செய்து, விளம்பரம் செய்து வருவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், சுகாதார பணியாளர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!