Tamilnadu
சாத்தூர் வெடி விபத்து: 6 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலை உரிமையாளர் கைது..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து முன்னதாக குத்தகைதாரர்கள் பொண்ணு பாண்டி சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஜெயராமு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி கைது செய்யப்பட்டார்.
5 தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்தவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆலை உரிமையாளர் சந்தனமாரி நாகர்கோவிலில் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சந்தனமாரியை கைது செய்து ஏழாயிரம் பண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுவரை ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள உள்குத்தகைதாரர்கள் சிவக்குமார், ராஜா, வேல்ராஜ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்து நடைபெற்று 6 நாட்களுக்கு பின் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”வாக்குகளை வெளிப்படையாகவே திருடும் பா.ஜ.க” : மீண்டும் ஆதாரங்களுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
”S.I.R-ஐ துணிச்சலுடன் எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.கதான்” : கரு.பழனியப்பன் பேச்சு!
-
டெல்லி குண்டு வெடிப்பு : வாய் கிழியப் பேசினால் போதுமா? அமித்ஷா பொறுப்பேற்க வேண்டாமா? - முரசொலி
-
தமிழ்நாடு அரசின் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி? - முழு விவரம்!
-
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது... விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது... விவரம் உள்ளே!