Tamilnadu

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சமூக வலைதளங்கள் : ஃபேஸ்புக்கை தடை செய்யப் பார்க்கிறதா மோடி அரசு?

டெல்லியின் எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு சூழ்ச்சிகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து ஜனநாயக முறையில் அமைதி வழியில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆதரவான கருத்துக்களை 500 ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கிய பிறகும் ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய மோடி அரசு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.

ஒருபக்கம் ட்விட்டர் நிறுவனத்திற்கு தொல்லைக்கொடுத்த மோடி அரசு தற்போது ஃபோஸ்புக் நிறுவனத்திற்கும் தொல்லைக் கொடுத்துள்ளது. ஏற்கனெவே ஃபோஸ்புக் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து தனது விதிமுறைகளை மாற்றி, மக்களுக்காக செயல்படும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறது.

ஃபோஸ்புக் நிறுனத்தின் கொள்கையில் முரண்பட்டுள்ள மோடி அரசாங்கம், ட்விட்டர் மற்றும் ஃபோஸ்புக் நிறுனத்திற்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில், “இந்தியச் சட்டங்களுக்கு கட்டுப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போன்” என மிரட்டல் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் , “சமூக ஊடகங்களுக்கு தேவையான சுதந்திரத்தையும், தனிநபர்களுக்கான சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது. அதேசமயம், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, இறையாண்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளும்.

அதுமட்டுமல்லது, இந்தியாவில் உள்ள சமூக ஊடகங்கள் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சர்ச்சைக்குரிய கருத்துக்கள், குறிப்பாக மோடி விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டுகிறார் எனும் ஹேஸ்டேக் போன்றவை தடுக்கப்பட வேண்டும். சமூக ஊடக நிறுவனங்கள் தங்களுக்கென தனியாக ஒழுங்கு கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களின் இத்தகைய அறிவிப்பு சமூக வலைதளங்களை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாகவும், இதன் மூலம் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தையும் தடை செய்யும் சூழலை மோடி அரசு திட்டமிட்டு உருவாக்கப் போவதாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

“கருத்துரிமைக்கு என்றுமே ட்விட்டர் முழு சுதந்திரம் கொடுக்கும். அதேநேரத்தில் தவறான கருத்தை யார் பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டர் வழிவிடாது” என்பதே தங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரம் என ட்விட்டர் நிர்வாக இயக்குநர் ஜாக் டோர்சே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பா.ஜ.க அரசின் பேச்சைக் கேட்காத ட்விட்டர் : ‘Koo’ எனும் செயலி அறிமுகம்.. அச்சுறுத்தப்படும் கருத்துரிமை!