Tamilnadu
கேரள லாட்டரி சீட்டில் 12 கோடி வென்ற தென்காசிக்காரர் : விற்காத லாட்டரிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
கேரளாவில் அரசு அனுமதியோடு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேரளா சம்மர் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. இதற்கான குலுக்கல், ஜனவரி 17ம் தேதி திருவனந்தபுரத்தின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த குலுக்கலில் XG 358753 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு 12 கோடி ரூபாய் கிடைத்தைத் தொடர்ந்து இந்த எண்ணுக்குச் சொந்தக்காரர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியானது. பின்னர் யார் அந்த அதிர்ஷ்டசாலி என தென்காசி மாவட்ட மக்கள் அந்நபரை வலை வீசி தேடினர். பின்னர் ஒரு வழியாக சுரஃபுதீன் என்ற நபர்தான் அந்த அதிர்ஷ்டசாலி என்பதைக் கண்டு பிடித்துவிட்டனர். ரூபாய் 12 கோடிக்கு அதிபதியாகியிருக்கும் சுரஃபுதீன் யார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தென்காசி மாவட்டம், புளியறை செல்லும் வழியில் உள்ள இரவியதர்மபுரத்தை சேர்ந்தவர் சுரஃபுதீன். இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் தம்பி இருக்கிறார்கள். அப்பா இறந்துவிட்டதால், குடும்ப வறுமை காரணமாக 9 வருஷமா பாலைவனத்தில் வேலை பார்த்துள்ளார்.
பின்னர், 2013ம் ஆண்டிலிருந்து லாட்டரி விற்கத் துவங்கியுள்ளார். தமிழ்நாட்டுக்குள்ளே லாட்டரி விற்பனைக்குத் தடை உள்ளதால், இருசக்கர வாகனத்திலேயே சென்று கேரளாவில் லாட்டரி சீட்டை விற்பனை செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், கேரளாவில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி விற்பனை செய்துள்ளார். இதில் விற்காத லாட்டரி சீட்டை கடையில் வைத்திருக்கிறார். அந்த லாட்டரி சீட்டுக்கே 12 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!