Tamilnadu

கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்த போதே இடிந்த மினி கிளினிக் சுவர்.. இரண்டு குழந்தைகளுக்கு காயம்!

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் உள்ள கொசூரில் நேற்று (ஜன.,30) தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற இருந்தது. 1991ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய சமுதாய கூடத்தை வர்ணம் பூசி மினி கிளினிக்காக அதிகாரிகள் மாற்றம் செய்திருந்தனர்.

அந்த மினி கிளினிக்கை திறந்து வைக்க போக்குவரத்துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் முண்டியடித்துக் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் அங்கு இருந்த இரண்டு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக காயமடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்லப்பட்டனர். கட்டட சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் காயமடைந்த்தால் பதற்றமடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு புறப்பட்டு சென்றார். அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவர் இடிந்து விழுந்ததால் கொசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: “மினி கிளினிக் எனும் பழனிசாமியின் வாழைப்பழ காமெடி!” - தமிழகம் மீட்போம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கிண்டல்!