Tamilnadu
“இட ஒதுக்கீடு பிரச்னைக்கு மோடி அரசும் ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகளுமே காரணம்” : நாராயணசாமி சாடல்!
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்டை மாநிலங்களில் மருத்துவப்படிப்பில் 50 சதவித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கு கிரண்பேடியும், மத்திய அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு புதுச்சேரியை வஞ்சித்துள்ளதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப்படிப்பில் 10 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு கொடுக்க முடியாத சூழ்நிலையை மத்திய அரசும் கிரண்பேடியும் திட்டமிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்டு இருந்த நிலையில் குடியரசு தின விழா ஏற்பாடுகளில் உள்ளதால் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கி தருவதாக அவரது அலுவலகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர் என்று கூறிய அவர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கப்பட்டுவதை நிறுத்தி வைக்க வேண்டுமென மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.
தொடர்ந்து மத்திய அரசு இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் நமது கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தாலும் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்து செல்கின்றனர். இதனை உடனடியாக மத்திய அரசும், பிரதமர் மோடியும் தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தற்போது பெட்ரோல் விலை விஷம் போல் உயர்ந்து வருகிறது. இது போன்ற விலை உயர்வை இதுவரை பார்த்தது இல்லை. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கச்சா என்ன விலை குறைவாக உள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிதரமர் விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்த்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!