Tamilnadu
எந்த சக்தியாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க முடியாது: திமுக ஆட்சி அமைவது உறுதி - ஆதித்தமிழர் பேரவை
தருமபுரி மாவட்டம், அரூரில் தனித் தொகுதிகளில் அருந்ததியர்களுக்கான சமூக நீதி வலியுறுத்தி அரசியல் எழுச்சி மாநாடு ஆதித் தமிழர் பேரவையின் மாவட்ட செயலர் பி.முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் இரா.அதியமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அருந்ததியர் சமூக மக்களுக்கு என எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த சமூக மக்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அருந்ததியர் சமூக மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு நன்றி உடையவர்களாக 2021ல் நடைபெறும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் களப் பணியாற்றுவோம்.
எந்த சக்தியாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வருவது தடுக்க முடியாது. கொரோனா பாதிப்பு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு உதவ முன்வரவில்லை. ஆனால், தற்போது தேர்தல் நேரத்தில் அரசுப் பணத்தை எடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கி வருகிறது. எத்தனை ஆயிரங்கள் வழங்கினாலும் பொதுமக்கள் பெறலாம். ஏனெனில், அரசு வழங்கும் பணம் அது நம்முடையது. ஆனால், தேர்தலில் வாக்குகளை மட்டும் திமுக கூட்டணிக்கு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் திமுக தருமபுரி கிழக்குமாவட்ட பொறுப்பாளரும் தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ. .சுப்ரமணி, ஆதிதமிழர் பேரவையின் பொதுச் செயலர் கோவை ரவிக்குமார், மாவட்ட தலைவர் சு.ராஜ்குமார், மாவட்ட அமைப்பு செயலர் சு.சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!