Tamilnadu
“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த விமானத்தில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுததால், அக்குழந்தையும், தாயும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் நேற்று பகல் 12 மணிக்கு, 'விஸ்தாரா ஏர்லைன்ஸ்' விமானத்தில், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அந்த விமானத்தில், ராகுல் என்பவர், அவரது மனைவி லட்சுமிதேவி (30), மற்றும் அவர்களது நான்கு மாத கைக் குழந்தையுடன் பயணித்துள்ளார்.
விமானத்தில் ஏறியதில் இருந்து, நான்கு மாத கைக்குழந்தை இடைவிடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. எவ்வளவு முயன்றும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால், முதல்வர் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படும் எனக் கருதி தாயும், குழந்தையும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணித்த விமானத்தில், குழந்தை விடாமல் அழுததற்காக, தாயும் குழந்தையும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு குழந்தையின் அழுகுரலைக் கூடச் சகித்துக்கொள்ள முடியாத முதல்வர் பழனிசாமி, குழந்தைகளுடன் புகைப்படம் மட்டும் எடுத்து பல கோடிகளில் விளம்பரம் செய்வது ஏன் என பொதுமக்கள் கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!