Tamilnadu
“யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றவேண்டும்” : தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
மலைப் பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுக்களில், கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமயம்பாளையம், பண்ணிமடை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த செங்கற் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், செங்கல் சூளைகளையும் அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்யும்படி தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!