Tamilnadu
“மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் பெற்ற ஆளுங்கட்சியினர்”: வீடுகளை ஒப்படைக்காமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க அரசு!
அரியலூர் மாவட்டம் ராவுத்தன்பட்டி ஊராட்சி பகுதியில் குடிசைமாற்று வாரியத்திற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 24 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. கட்டி முடிக்கப்பட் வீடுகள் பயனாளிகள் தேர்வு செய்ய வழக்கம்போல் ஆளுங்கட்சியினருக்கு கப்பம் கட்டும் சம்பிரதாயங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
வீடுகள் பணிமுடிக்கப்பட்டு சுமார் 1 ஆண்டுகளுக்கு மேல் கடந்தாகிவிட்டது கட்டிய கட்டிடங்களில் காரை பியரத்தொடங்கிவிட்டன. கொரோனா தொற்று நோயாளிகள் தங்கும் விடுதியாக சில மாதங்கள் மாற்றப்பட்டு அதற்கு வாடகை என்றபெயரில் கணிசமான ஒருதொகையை ஆளுங்கட்சியினரும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிலரும் சம்பாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு பெறுவதற்கு எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் டி.என்.எஸ்.சி.பி திருச்சி என்றபெயரில், 90 ஆயிரம் டி.டி தொகையும் 70 ஆயிரம் லஞ்சத்தொகையும் கொடுத்த பயனாளிகள் இளவுகாத்த கிளியாக காத்துகிடக்கும் அவலநிலைதொடர்ந்துவருகிறது.
அரியலூர் நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி -அறிவழகி குடும்பத்தினர் முடிதிருத்தும் தொழிலாளியான சுப்பிரமணி மாற்றுத்திறனாளியாவார். இவருக்கு 2 பெண்பிள்ளைகள் உள்ளன. வாடகைவீட்டில் வசிக்கும் குடும்பத்தினர் சொந்தவீட்டுகனவில் ஏங்கி வந்தனர்.
இதனைபயன்படுத்திக்கொண்ட ஆளுங்கட்சியினர் அவர்களுக்கு வீடுதருவதாக ஆசைவார்த்தை கூறி 70 ஆயிரம் லஞ்சம் பெற்றனர். மேலும் வீட்டுக்கு 90 ஆயிரம் வரைவு காசோலையை பயனாளி எடுத்து அனுப்பினார். குடிசைமாற்று வாரியத்தில் 288 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியினால் திறப்பு விழாவும் நடத்தப்பட்டு ஒருவருடகாலமாக பயனாளிகளுக்கு வீடுவழங்கப்படவில்லை.
தற்பொழுது வசிக்கும் வீட்டுக்கு ஒருவருட வாடகை வழங்கமுடியாத மாற்றுத்திறனாளி சுப்பிரமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் வீடு வந்தபாடில்லை தனது குடும்பத்தினை நடத்த இயலாதவர் அரியலூரில் உள்ள பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் கோயில் வாசல்களில் கொடுக்கப்படும் உணவினை பெற்று வயிற்றுப்பிழப்பு நடத்திவருவது அனைவரின் இதங்களையும் பிசைகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க அரியலூர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறுகையில், “அனைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கும் ஒதுக்கபட்ட வீடுகளை உடனடியாக வழங்கவேண்டும் எனவும், கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து வருகின்றன. அதனை கட்டுமான பொறியாளர்கள் ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 288 வீடுகளுக்கு சுமார் 2 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்ற அ.தி.மு.கவினர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார். பயனாளிகளுக்கு வீடுகள் உடனடியாக கொடுக்கப்படவில்லை என்றால் குடியிருப்பு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளார்.
வெற்றிநடைபோடும் தமிழகமே என்ற குரல் விளம்பரங்களில் மட்டுமே எதிரொலிக்கின்றதே தவிர, உண்மையில் தமிழகத்தின் நிலை மோசமான நிலையாகவே உள்ளது என்பதே நிதர்சன உண்மை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!