Tamilnadu
“உயிர்களைக் குடித்தும் அடங்காத விளம்பர வெறி” - சென்னையில் அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க நிர்வாகி!
அ.தி.மு.கவினரின் விளம்பர வெறி இதுவரை பல உயிர்களைக் காவு வாங்கியும், சாலையோரங்களில் அனுமதியின்றி பேனர்களை அமைக்கும் போக்கு அக்கட்சியினரிடையே தொடர்கிறது.
சென்னை பெருங்குடி எம்.ஜி.ஆர் சாலை கே.பி.கே நகரின் வாயிலில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் விளம்பர பேனர் வைத்துள்ளனர்.
எவ்வித முன் அனுமதியும் பெறாமல் பேனர் வைத்தது மட்டுமல்லாமல், நினைவு தினம் முடிந்து 3 நாட்களாகியும் பேனரை அகற்றாமல் வைத்துள்ளனர். எப்போது வேண்டுமானலும் சாலையில் விழுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மூன்று நாட்களாக பேனர் அகற்றப்படாமல் இருந்தும் இது தொடர்பாக துரைபாக்காம் போலிஸாரும், அரசு நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சமீபத்தில் அ.தி.மு.க சென்னை புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட கே.பி.கந்தன் தரப்பினர் அமைத்துள்ள பேனர் என்பதால் அதிகாரிகளும் போலிஸாரும் மெளனம் காக்கின்றனா எனும் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் என சொல்லிக்கொண்டு அதிகாரிகளை மதிக்காமல் சட்டத்தை மீறி கே.பி.கந்தன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதிகாரிகளும், பொதுமக்களும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!