Tamilnadu
“மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்”: மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற கிராமசபை கூட்டம் மிகப்பெரிய எழுச்சியுடன், அ.தி.மு.கவுக்கு எதிரான மக்கள் மத்தியில் தி.மு.கவால் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தி.மு.க கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.
எடப்பாடி அரசின் இத்தகைய தடையை மீறி, தமிழகம் முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடைமீறி மக்கள் கிராம சபைக் கூட்டங்களை தி.மு.க நடத்தி வருகிறது.
அந்தவகையில் நேற்றைய தினம் கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் பகுதியில், தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்திய மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேப்போல், கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட செளரிபாளையம் பகுதியி தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்திய மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்து செய்யப்பட்டனர். மேலும் நேற்று பல இடங்களில் காவல்துறை கைது நடவடிக்கை மற்றும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “தி.மு.க. நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கு, 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற முழக்கத்துடன் பெருமளவில் திரளும் பொதுமக்களின் உற்சாக வரவேற்பும், பங்கேற்பும் நாளுக்கு நாள் பெருகுவதைப் பார்த்துப் பதறுகிறது அ.தி.மு.க. அரசு!
கோவை மாவட்டத்தின் கழகச் செயலாளர்கள் கார்த்திக் எம்.எல்.ஏ., தென்றல் செல்வராஜ், பையா (எ) கிருஷ்ணன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வேலுமணி சூப்பர் முதல்வராகச் செயல்படும் மாவட்டத்தில்தான் இப்படியொரு அராஜகம் அரங்கேறியுள்ளது! இந்த மிரட்டல்களால் மக்களுடனான தி.மு.க.வின் பயணத்தைத் தடுக்க முடியாது. தடைகளை உடைத்தெறிவோம்; ஜனநாயக வழியில் தொடர்ந்து பயணிப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?