Tamilnadu

“அ.தி.மு.க அரசின் சாதனைப் பட்டியல்” - அதுல ஒண்ணும் இல்ல... கீழ போட்டுடுங்க..!

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் களப்பணிகளில் தி.மு.கவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிபதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து வருகின்றனர்.

அதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தி வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசும் கூட்டங்களின் மூலம் மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.

மேலும், தமிழகம் முழுவதும், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 15 தி.மு.க முன்னணியினர் 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்து சுமார் 1,500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 16,000 கிராம/வார்டு மக்கள் சபைக் கூட்டங்களையும் நடத்தி ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றி வருகிறது தி.மு.கழகம். தி.மு.க-விற்கு மக்களிடையே பெருகிவரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க அரசு, கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதித்து வழக்குப் பதிவு செய்து வருகிறது.

இவைபோக, இணையத்திலும் வலுவான பிரச்சார உத்திகளோடு களமிறங்கியுள்ளது தி.மு.க. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 'WeRejectADMK'எனும் இணையப் பக்கத்தில் ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்திற்கு இதுவரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆதரவளித்துள்ளனர்.

மேலும், ‘அ.தி.மு.க சாதனைகள்’ எனக் குறிப்பிட்டு தொடங்கப்பட்டுள்ள இணையப் பக்கம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அ.தி.மு.க-வின் சாதனைப் பட்டியலைப் பார்க்க : admkachievements.com