Tamilnadu
“பள்ளிக்கால நண்பன் கொரோனாவால் பலியான துக்கம் தாளாமல் இளைஞர் தற்கொலை” : பெருங்களத்தூர் அருகே சோகம்!
சென்னை தாம்பரத்தை அடுத்த நெடுங்குன்றம் தேவநேசன் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (28). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது பள்ளிக்கால நண்பர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததார்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற நண்பரின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி அறையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பீர்க்கன்கரணை போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து பீர்க்கன்கரணை போலிஸார் வழக்குப்பதிவு செய்து சங்கர், தனது நண்பர் கொரோனாவால் இறந்ததால் தான் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!