Tamilnadu
“மோடி ஆட்சி காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை அவர்கள் கொள்ளையடிப்பார்கள்” : க.பொன்முடி MLA பேச்சு!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. மேலும், தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இந்த உண்ணவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க, காங்கிரஸ், சிபிஐ(எம்) சிபிஐ, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பங்கேற்றுள்ள கட்சி நிர்வாகிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
அதன்படி, தி.மு.க துணை பொது செயலாளர் க.பொன்முடி பேசுகையில், “தொடர்ந்து வேளாண் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவரையும் ஒன்றிணைத்திருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
பெரும் முதலாளிகள் பல மடங்கு விலை வைத்து விற்கும் ஏதுவாக அமைந்துள்ள இந்த சட்டம், விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ ஏற்ற சட்டம் அல்ல. மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இங்கு அவருக்கு காவடி தூக்கும் எடப்பாடி இருக்கும் வரை இந்த நாட்டு மக்களை கொள்ளையடிக்க இருக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆட்சி மாறுமானால் நிச்சயம் அடுத்த முதல்வர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை தமிழகமக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!