Tamilnadu

“அ.தி.மு.க ஆட்சியில் தலைவிரித்தாடும் கந்துவட்டிக் கொடுமை” : ராமநாதபுரத்தில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகம் முழுவதும் கந்து வட்டிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சூழலில், ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டிக் கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருவவதால் பலர் வட்டிகட்ட முடியாமல் கந்துவட்டிக்காரர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியில் கந்துவட்டிக்காரர்கள் மிகவும் சுதந்திரமாக தங்களின் கந்துவட்டித் தொழிலைச் செய்துவருகின்றனர். கந்துவட்டியால் மக்கள் பாதிக்கப்படுவதை உணராத அ.தி.மு.க அரசு கந்துவட்டியை ஒழிப்பதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன்காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இதுபோல புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்தனர்.

சமீபத்தில் கூட தஞ்சாவூர் அருகே வல்லத்தில் வங்கி கிளை அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியது.

இத்தனை உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்தபிறகும், இதை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவு தற்போது, தங்கச்சிமடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர் பூமாரியப்பன் கந்துவட்டி காரர்களின் மிரட்டல் காரணமாக இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள அக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமாரியப்பன் இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பொருளாதார சூழ்நிலை காரணமாக சில நபர்களிடம் பணம் பெற்றுள்ளார் அதற்குரிய வட்டியை செலுத்தி வந்த நிலையில் கந்த வட்டி கேட்டு தொடர்ந்து ஆசிரியரை மிரட்டி வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு அவர் வீட்டின் பின்பகுதியில் உள்ள பகுதியில் செட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கந்த வட்டி மிரட்டல் காரணமாக தமிழ் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாம்பன் போலிஸார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: அதிமுக ஆட்சியில் தொடரும் கந்துவட்டி கொடுமை.. விழுப்புரத்தில் 3 குழந்தைகள் உட்பட ஐவர் தூக்கிட்டு தற்கொலை !